தகரங்களை இறக்கும் போது அவை சரிந்து விழுந்தமையால் கழுத்தில் காயமடைந்தவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
மயிலிட்டி வடக்கு, காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்த ஹரிகரராஜா டலஸ்குமார் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் அமைந்துள்ள இரும்பகம் ஒன்றில் பணிபுரிந்த வந்த குறித்த நபர் கடந்த 14ஆம் திகதி கடையில் தட்டியில் அடுக்கப்பட்டிருந்த தகரங்களை இறக்குவதற்கு முயற்சித்தார்.
இதன் போது தகரங்கள் அவர் மீது விழுந்ததில் அவரது கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் தகரங்கள் வெட்டியுள்ளன. அதனை அடுத்து ,சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.






No comments