யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் சாரதி காயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கற்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் , வேக கட்டுப்பாட்டை இழந்து, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் சங்கத்தானை பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி , கடை யொன்றுடன் மோதி தனது இயக்கத்தை நிறுத்தியது.
குறித்த விபத்தில் டிப்பர் சாரதி காயமடைந்த நிலையில் , அங்கிருந்தவர்கள் சாரதியை மீட்டு , சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.










No comments