இலங்கை வம்சாவளியை சேர்த்த ஆறு வயது சிறுவனான “சிவாங்க் வருண்” (Shivankh Varun), கின்னஸ் உலக சாதனையொன்றை (Guinness World Record) நிகழ்த்தியிருக்கிறார்
துபாயில் வசிக்கும் இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஜேர்மன் வாழ் தமிழ்ச் சிறுவனான சிவாங்க், பாரம்பரிய சிம்ஃபனி இசைக் கலைஞர்களின் (Classical Music Composers) இசையைக் கண்டறிவதில் சாதனை படைத்திருக்கிறார்.
ஒரு நிமிடத்தில் 16 சிம்பனி இசைக் குறிப்புகளை அடையாளப்படுத்தியதில் இச்சாதனை பதிவாகியுள்ளது.
பாஹ் (Bach), பேத்தோவன் (Beethoven), மொஷார்ட் (Mozart), ஷொபின் (Chopin), விவால்டி (Vivaldi), ஷக்கோவ்ஸ்கி (Tchaikovsky), டெபுசி Debussy, ரிம்ஸ்கி (Rimski), வேர்டி (Verdi) போன்ற 65க்கும் மேற்பட்ட சிம்ஃபனி இசைக் கலைஞர்களின் நூற்றுக்கணக்கான இசைகளை கணநேரத்தில் சிவாங்கால் கூறமுடிகின்றது.
சிறுவனின் திறமையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்
No comments