யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால், அந்த வீதியின் ஊடாக பயணிப்போர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த வீதியில் யாழ்ப்பாண மாநகர சபையின் நிதியில் வெள்ள வாய்க்கால் அமைக்கும் பணிகள் முன்னெடுப்பதற்கான ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.
வாய்க்கால் அமைப்பதற்கு தேவையான கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களும் தருவிக்கப்பட்ட நிலையில் , சில அரசியல்வாதிகளின் அரசியல் நோக்கம் கருதிய செயற்பாட்டினால் பணிகள் இடைநிறுத்தப்பட்டு , வீதியில் இறக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் மீள ஏற்றப்பட்டு வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்தும் வீதியில் வெள்ளம் தேங்கி நிற்பதால் , வெள்ளம் வடிந்தோட ஏதுவாக திட்டங்களை முன்னெடுக்குமாறு அப்பகுதியில் வசிபோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments