Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாய்


இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த விலை நிர்ணயம் அதன் தலைவரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 210 ஆகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 220 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 230 ஆகவும், ஒரு கிலோ கிராம் பொன்னி சம்பாவின் அதிகபட்ச விலை ரூ. 240 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த வர்த்தமானி அறிவிப்பில் ஒரு கிலோ கிராம் கீரி பொன்னி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ. 255 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில், இந்த விலை திருத்தங்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments