யாழ்ப்பாணத்தில் தனது காதலனின் கண்முன் உயிரை மாய்க்க முயன்ற யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த 20 யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி யுவதியும் இளைஞனும் தனிமையில் இருந்த வேளை யுவதி தனது மாய்க்க முயன்றுள்ளார். அதன் போது காதலனான இளைஞன் யுவதியை காப்பாற்ற முற்பட்ட வேளை இளைஞனும் காயங்களுக்கு உள்ளான நிலையில் , யுவதியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments