நாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 24 கரட் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,700 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 310,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் 21 கரட் தங்கம் பவுண் ஒன்று 296,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,750 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,750 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
அண்மையில் திடீரென 4 இலட்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை கடந்த வாரம் சரிந்து 3 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 


.jpg)


 
 
.jpg) 
No comments