உலக அஞ்சல் தினைத்தை முன்னிட்டு காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றன.
காங்கேசன்துறை தபால் நிலைய தபால் அதிபர் ரி. சித்துறூபா தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை காலை 08 மணி முதல் மதியம் 01 வரையில் நடைபெற்ற இரத்தான முகாமில் அஞ்சல் நிலைய உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்ததிற்கு பெரும் தட்டபாடு நிலவுவதாகவும் அதனால் இரத்த தானம் செய்யும் கொடையாளர்கள், இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்பவர்களை இரத்த வங்கியுடன் தொடர்பு கொள்ளுமாறு இரத்த வங்கியினர் கோரியுள்ளனர்.
No comments