அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சந்தேக நபரை பிணையில் செல்ல அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது.
சந்தேகநபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதித்தது.
இருப்பினும், சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்த போது அங்கிருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமைய அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணருக்கான பயிற்சி பெற்று வரும் 32 வயதுடைய பெண் வைத்தியர் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி இரவு அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் அடையாளம் தெரியாத ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
அது தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலையே குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
No comments