Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.மாபெரும் அழகுக்கலை பயிற்சி


யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஒப்பனை கலை மற்றும் மணப் பெண் அழகுக் கலை வடிவமைப்பு ,கேக் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு அலங்காரம் போன்ற பல பயிற்சிகளை நடத்தி போட்டிகளை நடாத்தவுள்ளதாக அருந்ததி நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையில் பெண் அழகுக் கலை நிபுணர்கள் இணைந்து ஏற்படுத்திய அருந்ததி மாற்று மோதிரம் எனும் அமைப்பினர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மணப்பெண் வடிவமைப்பின் அழகு சாதனையாளர்கள். அதை துறை சார்ந்தவர்கள் அத்துடன் பாடசாலை விட்டு விலகிய மாணவிகளை இத்துறையில் ஊக்கப்படுத்தி பயிற்சியளித்து அவர்களுக்கு சுய தொழில் முயற்சியில் ஏற்படுத்தும் அவர்கள் படைப்புக்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அதி கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் நிறுவனமாகும்.

இந் நிறுவனத்தினர் 2014 ல் ஆரம்பித்து கொழும்பு , கண்டி யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் போட்டி நிகழ்சிகளை ஏற்படுத்தி அதற்கு விருதுகளை வழங்கி வருகின்றனர் 

அத்துடன் திருமணம் சம்பந்தப்பட்ட மலர்கள் திருமணமாகாத இளைஞர் யுவதிகளை திருமணத்திற்கு இலவச மலர் இதழ்களையும் வெளியிட்டு சேவையாற்றி வருகின்றனர்.

எதிர்வரும் ஜனவரி 09. 10,11 ஆம் திகதியில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஒப்பனை கலை மற்றும் மணப் பெண் அழகுக் கலை வடிவமைப்பு ,கேக் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு அலங்காரம் போன்ற பல பயிற்சிகளை நடத்தி அத்துடன் இது துறை சார்ந்தவர்கள் படைப்புகள், அவர்கள் உடை அலங்காரங்களை யாழ்ப்பாணத்தில் மேடையேற்ற உள்ளனர் 

இவ்விடயம் சம்பந்தமாக மாற்று மோதிரம் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.கலாமோகன் தலைமையில் வெள்ளவத்தை நெல்லி ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இந் ஊடக மாநாட்டில் தினகரன் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் ஈ.செந்தில்வேலவன், அழகு கலை நிபுணர்களான அனு குமரசேன், சங்கவி அன்டன், கயல்விழி, ஜெயபிரகாஷ், மற்றும் ஜெயந்தி முரளி ஆகியோர்களும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஒப்பனை கலை மற்றும் மணப் அலங்காரம் பற்றி கருத்துக்களை முன் வைத்தனர்

இந்நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இராஜேஸ்வரி மண்டபம், தெல்லிப்பளை எதிர்வரும் ஜனவரி மாதம் 09,10.11ஆம் திகதிகளினல் நடைபெறுகிறது. 

கடந்த 12 வருடங்கள் இந் நிறுவனம் அருந்ததி அருந்ததி எனும் பெயரில் பல மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இத்துறை சார்ந்தவர்களை உள்நாட்டிலும் இந்தியாவிலும் மாற்று மோதிரம் நிகழ்வுகளை நடத்தியுள்ளது

இருந்தும் இக் அழகு கலை மணப்பெண் மணமகன் அலங்கார வடிவமைப்பாளர்களை மேலும் ஓரு குடையின் கீழ் கொண்டு வரவுள்ளனர்.

பெண்களது திறமைகளை வெளிக்கெனர்ந்து களம் அமைத்துக் கொடுக்கவுள்னர், பெண் சாதனையாளர்களை அறிமுப்படுத்தும் நிகழ்வினை ஏற்படுத்த உள்ளது. 

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் நடைபெற்றது போன்று வடமாகணத்திலும் நடாத்தவுள்ளனர்.

அவர்களது அழகுக் கலைகள் சர்வதேச தரத்திற்கு மேடையேற்றப்பட்ட உள்ளனர். அத்துடன் புதிய யுவதிகள் இத துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் செயல்முறைகளையும் அருந்ததி வழங்கப்படவுள்ளது.

இடம்பெறும் இதில் விண்ணப்பிப்பவர்கள் ஊடகங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக அருந்ததி அருந்ததி ,மாற்று மோதிரம் முகநுாலில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். என சங்கவின் அண்டன் தெரிவித்தார். கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இவ் அமைப்பு இத்துறையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் களம் அமைத்துக் கொடுத்து வருகிறது. எனவும் தெரிவித்தார்

இத்துறைக்கு மேலும் பங்கு கொண்டு தமது அர்ப்பணிப்பினை வழங்குவதற்கே அனு அழகுக் கலை நிபுணர், மற்றும் பிராண்ஸ் நாட்டில் ஒப்பனைக் கலை விருது வென்ற கயல்விழி. மற்றம் ஜெயப்பிரகாஸ் கருத்து தெரிவித்தார்கள்.

அத்துடன் தினகரன் ,தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் ஈ.செந்தில்வேலவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த 20214 ல் இருந்து மாற்று மோதிரம் அருந்ததி நிறுவனத்திற்கு லேக்ஹவுஸ் பத்திரிகைகள் அனுசரனை வழங்கி வருகின்றது. அதேபோன்று எதிர்வரும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு அனுசரனை வழங்குவதாக தெரிவித்தார்





No comments