ஈழத்தில் மிக பிரமாண்டமான முறையில் தயாராக இருக்கும் மில்லர் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஓன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈழ திரைப்படங்களை தயாரித்து வரும் பாஸ்கரன் கந்தையாவின் தயாரிப்பில் , ஈழத்தின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ராஜ் சிவராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் பூவன் மதீசனின் இசையமைப்பில் மில்லர் படம் உருவாகவுள்ளது.
திரைப்பட ஆரம்ப நிகழ்வில், கவிப்பேரசு வைரமுத்து, இயக்குநர்களான பாண்டியராஜ், நித்திலன் , நடிகர்களும் இயக்குநர்களுமான ரஞ்சித், சிங்கம்புலி, தயாரிப்பாளரான P.L தேனப்பன் மற்றும் வசந்தபவன் தயாரிப்பாளர் ரவி முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட விருந்தினர்களுடன், ஈழத்து கலைஞர்கள், ஈழ சினிமா ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த திரைப்படத்தில் அறிமுக நடிகர் றீகன், நடிகை மிதுனா , ஒளிப்பதிவாளர் ஏ.கே கமல், பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின், படத்தொகுப்பாளர் அருண், ஒப்பனை கலைஞர் டேறியன், கலை இயக்குநர் கோபி , ஆடை வடிவமைப்பாளர் V.S சிந்து, , இசைக்கலவை சாய்தர்சன் உள்ளிட்டவர்களுடன் ஈழ கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றவுள்ளனர்.
ஈழத்தின் பின்னணிகளை, கதைக்களமாக கொண்டு புத்தி கெட்ட மனிதர்கள் , டக் டிக் டொஸ், தீப்பந்தம் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய ராஜ் சிவராஜின் இயக்கத்தில் உருவாகவுள்ள மில்லர் திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்புள்ளமை குறிப்பிடத்தக்கது.

















No comments