ஈழ சினிமாவை இந்திய சினிமா திரும்பி பார்க்கும் காலத்தை உருவாக்குவதுடன் , ஈழ சினிமாவில் இந்திய நடிகர்கள் , கலைஞர்கள் ஆர்வத்துடன் பணியாற்றும் காலத்தை உருவாக்குவோம் என மில்லர் திரைப்படத்தின் இயக்குநர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மில்லர் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வில், உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஈழ சினிமாத்துறையில் 15 வருடமாக செயற்பட்டு வருகின்றேன். என்னுடன் பல கலைஞர்கள் தொடர்ந்து பயணித்து வருகின்றனர்.
இந்ததுறையில், இத்தனை வருடங்கள் பயணிக்க எனக்கு உறுதுணையாக இருந்த அண்ணா , அக்கா , மணைவி உள்ளிட்டோருக்கு இந்த தருணத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த திரைப்பட ஆரம்ப விழாவிற்காக, இந்தியாவில் இருந்து கலைஞர்கள் வரும்போது , ஈழத்தில் இருந்து படங்கள் வெளிவருகின்றனவா ?அவை எவ்வாறான படங்கள் , இங்குள்ள கலைஞர்களின் திறமைகள் என ஈழ சினிமா தொடர்பில் அறிந்து கொண்டிருக்க சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்காது என நினைக்கிறேன்.
இனி வரும் காலங்களில் ஈழ சினிமா பற்றிய தான புரிதல்களுடன் எமது படங்களை தென்னிந்திய திரைஉலகம் திரும்பி பார்க்கும் காலத்தை உருவாக்குவோம்.
தென்னிந்திய நடிகர்கள் இன்றைய நிகழ்வில் விருந்தினர்களாகவே கலந்து கொண்டுள்ளனர். விரைவில் ஈழ சினிமாவில் தென்னிந்திய நடிகர்கள் , கலைஞர்கள் ஆர்வத்துடன் பணியாற்றும் காலத்தையும் உருவாக்குவோம் என மேலும் தெரிவித்தார்.






No comments