போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை செயலி ஊடாக செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
அதில் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் பிரிவுகளின் போக்குவரத்துப் பொலிசார் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சாரதிகளின செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக போக்குவரத்து பொலிசாரால் விதிக்கப்படும் அபாரதங்களை அவ் விடத்திலேயே செயலி மூலம் செலுத்தும் நடைமுறை நாடு பூராகவும் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இதனை நடைமுறைப்படுததும் வகையில் போக்குவரத்து பொலிசாருக்கு தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.











No comments