Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சுழிபுரம் மேற்கில் 'நெல் மாணிக்கங்கள்' விதைப்பு: 10 இலட்சம் ரூபாய் கடன் சுமையை நீக்கிய பிரான்ஸ் தொழிலதிபர்!


யாழ்ப்பாணம் சுழிபுரம் மேற்குப் பகுதியில், குகன் சங்கமும் கலைமகள் குடும்பமும் இணைந்து முன்னெடுத்த ‘பசுமைப் புரட்சி’ திட்டத்தின் கீழ், மானாவாரி நெற்பயிர்ச் செய்கைக்கான ‘நெல் மாணிக்கங்கள்’ விதைப்புத் திருவிழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்த புலம்பெயர் உறவுகள் பங்கேற்று நெல் விதைத்து, நிலத்தை உழுது, பாரம்பரிய விவசாய முறைக்கு மீளவும் உயிர் கொடுத்தனர்.

நெல் விதைப்புத் திருவிழா:

சுழிபுரம் மேற்கு, திருவடிநிலை, சவுக்கடி பகுதியிலுள்ள குகன் சங்க தரிசு நிலங்களை வளமாக்கி உருவாக்கப்பட்ட பசுமைத் தோப்பில், பகுதி 03 மற்றும் 04 காணிப் பிரிவுகளில் மானாவாரி நெல் விதைப்பு நிகழ்வு இடம்பெற்றது.

பசுமை குழு நிதி ஒருங்கிணைப்பாளர் நா.சபாரத்தினத்தின் நெறிப்படுத்தலில், சுழி மேற்கு குகன் சங்கம் மற்றும் பசுமை குழு நிர்வாக உறுப்பினருமான மா.சண்முகம் தலைமையில் இந்த விழா சிறப்புற நடந்தது.

அதன் போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்த தொழிலதிபர் கோபாலகிருஸ்ணன் சாந்தகுமார் (கலைமகள் குடும்பம்), மற்றும் கனடாவில் இருந்து வருகை தந்த அருமைதுரை மகாதேவன் (பாண்டி - கலைமகள் குடும்பம்) ஆகியோர் சிறப்பிப்பாளராகக் கலந்துகொண்டு தமது கைகளால் நெல் விதைத்து, உழவு இயந்திரம் மூலம் உழவு செய்து நெல் விதைப்புத் திருவிழாவைச் சிறப்பித்ததுடன், பசுமை குழுவினருக்கு ஆலோசனைகளையும் வழங்கினர்.

10 லட்சம் கடன் சுமை நீக்கம்:

இவ்விழாவின் உச்சக்கட்டமாக, குகன் சங்கம் - கலைமகள் குடும்பத்தின் பசுமைப் புரட்சி திட்டத்திற்காக, பகுதி 03 மற்றும் 04 பசுமைத் தோப்பு காணி பார்வையிட்டதுடன் இலக்கம் 100 க்கு 43-ம் இடத்தில், பத்து இலட்சம் ரூபாய் (10,00,000.00 ) நிதியை அன்பளிப்புச் செய்ய முன்வந்தனர் கோபாலகிருஷ்ணன் சாந்தகுமார் குடும்பத்தினர்.

குறிப்பாக, பசுமைத் திட்டச் செயற்குழுவினருக்கு இருந்த 10 இலட்சம் ரூபாய் கடன் சுமை பற்றிய செய்தியை இணையங்கள் மூலம் அறிந்த தொழிலதிபர் கோ.சாந்தகுமார், இந்தக் கடனைத் தள்ளுபடி செய்து, கட்டம் கட்டமாகத் தொகையை அளிப்பதாக அங்கு பகிரங்கமாக வாக்குறுதி அளித்தார்.

கடந்த காலங்களில் தமது அப்புவுடன் தாம் இந்தக் காணிகளில் விவசாயம் செய்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளதாகவும், தரிசு நிலத்தைப் பசுமை நிலமாக்கிய திட்டத்தின் கடன் சுமையை நீக்க வாய்ப்புக் கிடைத்ததையிட்டு ஆனந்தம் கொள்வதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

புலம்பெயர் உறவின் தொடர்ச்சியான பங்களிப்பு:

கனடாவில் வசிக்கும் அருமைதுரை மகாதேவன் (பாண்டி), இந்த நிகழ்வைச் சிறப்பித்ததுடன், பசுமைத் தோப்பில் தென்னம்பிள்ளைகள் வைப்பதற்குத் தன்னாலான உதவியைச் செய்வதாகவும் உறுதியளித்தார். 

இவர், 1995ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இத்தாலியில் இருந்து கலைமகள் இலவச கல்வி நிலையத்துக்கு முதன்முதலில் நிதி உதவி செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது துப்புரவு செய்யப்பட்ட 230  பரப்புக் காணிகளில் 120 பரப்பு நெற்செய்கைக்கும், மீதி 110 பரப்பு எள் சாகுபடிக்கும் உகந்ததாக இனம் காணப்பட்டுள்ளது.  எல்லா காணிகளிலும் எள் சாகுபடி செய்ய உகந்த பகுதியாகும்.

பனி உறைந்த குளிர் நாடுகளில் வசித்தாலும் தாயகத்தின் விவசாயப் புரட்சிக்கு ஊக்கமளித்து, 10 இலட்சம் ரூபாய் நன்கொடை அளித்த கோ.சாந்தகுமார் குடும்பத்தினருக்கு, பசுமை திட்டத்தினர் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்





No comments