பல நாடுகளை சேர்ந்த இராணுவத்தினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வரும் 30 பேர் அடங்கிய குறித்த குழுவினர் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு , யாழ் . பொது நூலகத்தை பார்வையிட்டனர்.
நூலகத்திற்கு வந்த குழுவினரை , நூலகர் மற்றும் நூலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்று , நூலகம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
அதனை தொடர்ந்து குறித்த குழுவினர் யாழ்ப்பாண கரையோர கிராமங்கள் சிலவற்றுக்கு நேரில் சென்றனர்
நாளைய தினம் புதன்கிழமை குறித்த குழுவினர் நெடுந்தீவுக்கு செல்லவுள்ளனர்.





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments