வாயினால் , மின்வயரை பிளக்கில் செருக முற்பட்டவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியை சேர்ந்த புவனேந்திரன் தேவபாலன் (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு பிறப்பில் இருந்தே கைகள் மற்றும் கால்கள் செயற்படாத விசேட தேவைக்குரிய நபர் ஆவார். இவர் நேற்றைய தினம் புதன்கிழமை மின் இணைப்பு தேவைக்காக வயரை வாயில் வைத்தவாறு பிளக்கினுள் செருக முற்பட்ட வேளை மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
No comments