தமிழகத்தின் இளம் இசைமேதை லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோரின் தயாரிப்பில் உருவான குறளிசைக் காவியம் தொகுதி இரண்டு
வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில், யாழ் இந்திய துணைத்தூதரக ஏற்பாட்டில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
1330 குறட்பாக்களையும் இசையுடன் பாடி இசையுடன் பொருள் கூறி குறளிசைக் காவியத்தை வெளியிட்டுள்ளனர்
தொகுதி இரண்டின் பகுதிகளை இந்திய துணை தூதர் சாய் முரளி பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திர மௌலீசன் லலீசன் பாரதியாரின் கொள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி விரிவுரையாளர் முனைவர் சுகன்யா அரவிந்தன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கி வெளியிட்டு வைத்தனர்
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 1000 பாடகர்கள் குறளிசை காவிய பாடல்களுக்கு குரல் கொடுத்துள்ளனர்
இலங்கையைச் சேர்ந்த சரிகமப சபேசன் வைஷாலி யோகராஜன் தினேஷ் கனகரெட்ணம் உள்ளிட்ட 25 இளைய தலைமுறை பாடகர்களும் இதில் அடங்குவர்
1330 பாடல்களையும் பத்து பிரிவுகள் ஆக்கி பத்து நாடுகளில் வெளியீடு செய்ய உள்ளனர்
இதன் முதல் வெளியீடு கடந்த செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாடு வள்ளுவர் கோட்டத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது
இரண்டாவது வெளியீடு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்திய துணை தூதரின் தலைமையில் இடம்பெற்றது
No comments