Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தூக்கு தண்டனை கைதிகளில் 05 பாடசாலை மாணவர்களும் 21 பெண்களும்


பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். 

நாவலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் கருத்துக்களைத் தெரிவித்தார். 

தூக்கிலிடப்பட உள்ள 805 ஆண்களும் 21 பெண்களும் உள்ளனர். 

தூக்கிலிடப்பட உள்ள 805 பேரில் 5 பாடசாலை மாணவர்களும் அடங்கியுள்ளனர். 

தென் மாகாணம் தான் பாதாள உலக நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளது. இவ்வளவு படித்த சமூகம் கூலிக்கு கொலை செய்யும் சமூகமாக எப்படி மாறியுள்ளது என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. 

எப்படி பாரிய அளவில் போதைப்பொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டை அழிக்கும் நிலைக்கு அவர்கள் கொண்டு வந்தார்கள். 

இதற்கெல்லாம் மூல காரணம் இந்த நாட்டில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள். அவர்கள் நிச்சயமாக தூக்கிலிடப்பட வேண்டும். 

ஏனென்றால் அவர்கள் ஒரு தேசத்தை அழிக்கிறார்கள். எனவே, பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அது பாவம் அல்ல." என்றார்.

No comments