வீட்டு திட்டம் தேவைப்படுகின்ற அனைவருக்கும் வீடு திட்டத்தை வழங்குவதோடு மக்கள் வறுமையின்றி அடிப்படை வசதிகளோடு வாழ்வதற்கு ஏற்றவாறு தமது அரசாங்கத்தால் வீடுகள் வழங்கப்பட்டு வருவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை குட்டியப்புலம் பகுதியில், 'சமட்ட நிவஹண' வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று அதன் பயனாளியிடம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான வீட்டினை கையளித்தார். வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் 88 வீடுகளிற்கான நிதியோதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இதுவரை 80 வீடுகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
அவற்றை 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் தலா 1 வீடு வீதம் இவ்வாரம் கையளிக்கப்பட்டு வருகிறது.
அத்துடன் அனைத்து வீட்டுப் பயனாளர்களிற்கும் மரக்கன்றுகள் வழங்கப்படுவதோடு முன்பள்ளிச் சிறார்களிற்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.
No comments