Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்திய சாரதி - வீதியில் நடந்து சென்ற மூவர் உயிரிழப்பு ; கம்பளையில் சோகம்


கம்பளை, தொலுவ பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை வீதியில் நடந்து சென்றவர்கள் மீது கார் ஒன்று மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய பெண்ணின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கம்பளை, தொலுவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதியுள்ளது. 

அதன் போது, மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தினை ஏற்படுத்தியவர் சாரதி பயிற்சி அனுமதிப் பத்திரத்தை கொண்டவர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பெண் தமது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் கம்பளை நகருக்கு வந்த நிலையில் கணவர் தமது மனைவிக்கு காரை செலுத்துவதற்கு வாய்ப்பளித்த போது, விகாரைக்கு முன்பாக வீதியில் பலர் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்ததை அவதானித்து , பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக Accelerator ஐ அழுத்தியுள்ளார்

இதனால் கார் வேகமாக சென்று வீதியில் பயணித்தவர்கள் மீது  மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments