Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். சட்டத்தரணிகளை எதிராக நடவடிக்கை எடுத்துள்ள பொலிசாரை பாராட்டிய ஆளுநர்


காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 

பொலிஸாரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனாலும் இன்னமும் சில பொலிஸ் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமையவேண்டும் 

அத்துடன் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் கடமையில் உள்ள போதும் வீதிகளில் நெரிசல் காணப்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும்.

அதேபோன்று பாடசாலைகளுக்கு அண்மையாக வீதிகளில் கனரக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதான வீதிகளின் கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

 பொலிஸாரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இவற்றைக் கட்டுப்படுத்தலாம். 

யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞ்சையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை என்பதால் பொலிஸார் பாடசாலை நேரங்களில் இத்தகைய இடங்களில் கட்டாயம் கடமைகளில் ஈடுபடவேண்டும்.

வீதிகளில் இரவு நேரங்களில் குப்பைபோடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்பை கோருகின்றனர். 

சுற்றாடல் பொலிஸாருடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பணியாளர்களையும் ஈடுபடுத்த தயாராக இருக்கின்றனர்., குப்பைகள் அடிக்கடி போடப்படும் பிரதேசங்களை இனங்கண்டு அந்தப் பகுதிகளில் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் 

இதேநேரம், புகைப்பிடித்தல் பொருட்கள் விற்பனையை பகிரங்கமாக விளம்பரப்படுத்த முடியாத நிலையில், சங்கேத குறியீடுகளை வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும். என ஆளுநர் தெரிவித்தார். 




No comments