Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மாறுவேடத்தில் காணி மோசடி - மக்களிடம் உதவி கோரிய பொலிஸார்!


போலி ஆவணங்களைத் தயாரித்து சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 

150 மில்லியன் ரூபா  பெறுமதியான காணி ஒன்றுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்து, சொத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக  குற்ற விசாரணைப் பிரிவு 03 இனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான பெண், வேறொருவராக ஆள்மாறாட்டம் செய்து போலி உறுதியில் கையெழுத்திட்டுள்ளதுடன் சந்தேகநபரான பெண் பொலிஸாரைத் தவிர்த்து தலைமறைவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

அவர் வசிக்கும் இடம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

சந்தேக நபரின் புகைப்படத்தை பொலிஸார் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ளதுடன், சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவின் தொலைபேசி இலக்கமான  03 - 011 - 2434504 என்ற இலக்கத்திற்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நடவடிக்கை அறை இலக்கமான - 011 - 2422176 என்ற இலக்கத்திற்கும் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments