யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப்பத்திர சான்றிதழ் வழங்கும் விழா, கலாசாலையின் ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இசுறுபாய கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் ஸ்ரீமா தசநாயக்க கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக தேசிய கல்வி நிறுவகத்தின் நிறுவன அபிவிருத்திக்கான பணிப்பாளர் எஸ்.குமார, நூலகத்திற்கான பணிப்பாளா் சரத் நந்தகுமார, கொட்டக்கல ஆசிரியர் கலாசாலையின் அதிபர் சு.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் கலாசாலையில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்று, மங்கல நாதஸ்வர இசையுடன் குடை, ஆலவட்டங்கள் முதலிய மங்கல பொருட்கள் சகிதம் வரவேற்பு ஊர்வலம் இடம்பெற்றது.
அதை தொடர்ந்து தேசியக்கொடி, கலாசாலைக்கொடி என்பன ஏற்றப்பட்டு, சரஸ்வதி சிலைக்கான வழிபாடு நடைபெற்றது
தொடந்து கலாசாலையின் 102 ஆவது கல்லூரி நாளை அடையாளப்படுத்தும் வகையில் கேக் வெட்டப்பட்டது. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆசிரியர் கல்விக்கான பணிப்பாளர் கேக்கை வெட்டினார்.
அதனை அடுத்து பயிற்றப்பட்ட 45 ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் பிரதிகள் கையளிக்கப்பட்டன











No comments