யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் நேற்றைய தினம் புதன்கிழமை நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே, யாழ் . நகர் பகுதியில் வைத்து 25 வயதுடைய நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் , 07 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
நால்வரையும் , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்







No comments