Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சண்டிலிப்பாய் பிரதேச கலை இலக்கிய விழா


சண்டிலிப்பாய் பிரதேச கலாசார அதிகாரசபை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய கலை இலக்கிய விழா சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  சண்டிலிப்பாய் சீரணி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சண்டிலிப்பாய் பண்டிதர் க.ஈஸ்வரநாதபிள்ளை அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான கலை இலக்கிய விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவபாலன் சிவன்சுதன் , யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர்  .ஈஸ்வரநாதபிள்ளை குமரன், கௌரவ விருந்தினர்களாக சிற்ப, சித்திரக் கலைஞர் கலாபூஷணம் சுப்பிரமணியம் பத்மநாதன் , நாடகக் கலைஞர் கலாபூஷணம் செல்லையா உதயச்சந்திரன் , வர்த்தகர் அந்தோனிப்பிள்ளை சூரியகுமார் கலந்து சிறப்பித்தனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி மண்டபத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து , கலாபூஷணம் கே.ஆர்.டேவிட் ஞாபகார்த்த பேச்சுப் போட்டி பரிசளிப்பு மற்றும் 2024 தேசிய இலக்கிய விழா - தேசிய மட்ட வெற்றியாளர் கௌரவிப்பும், தேசிய இலக்கியப் போட்டியில் வெற்றியீட்டியோர் பரிசில் வழங்கலும் இடம்பெற்றன

இந் நிகழ்வில் கலை ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.










No comments