அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்தார்.
பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
உயிரிழந்த நபர், கடல் உணவு வர்த்தகரான 54 வயதுடைய நிலந்த வருஷ விதான என தெரியவந்துள்ளது.
இவர், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






No comments