கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் மீன்பிடியாளர்களாகவே இருக்காது தொழில்த் துறைசார் வல்லுநர்களாகவும் பரிணாம்பெற வேண்டும். அதற்கான அனைத்து துறைசார் கல்வியூட்டல்களையும் வழங்க சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என யாழ் சமுத்திரவியல் பல்கலைக் கழகத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி சயந்தன் லிந்தா தெரிவித்துள்ளார்.
உலக கடற்தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மெசிடோ நிறுவனத்தின் அனுசரணையில் "நவீன தொழில் நுட்பத்தின் ஊடாக சமுத்திரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்: சிறிய அளவிலான மற்றும் நிலையான மீன்வளத்தை வலுப்படுத்தல்" என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை முறையிலான பயிற்சிப் பட்டறை .
யாழ்ப்பாணத்தில் உள்ள சமுத்திரவியல் பல்கலைகழகத்தில் நேற்று இடம்பெற்றது
நிகழ்வின் இறுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடற்றொழில் சமூகம் மட்டுமல்ல அந்த துறைசார் முயற்சிகளை முன்னெடுப்பவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி முன்னகர்த்திச் செல்லும் வகையில் சட்டரீதியான பயிற்சிகள் மட்டுமல்லாது NVQ தொழில் சான்றிதழ், பட்டப்படிப்புகள் என கடல் சார் பல்லியல் கற்கை நெறிகளை வழங்குவதற்கு சமுத்திரவியல் பல்கலைக்கழகம் ஒரு திறவுகோலாக இருக்கின்றது.
ஆனால் இங்கு கல்விகற்க வரும் மாணவர்கள் வருகை மிகக் குறைவாகவே இருக்கின்றது. இதற்கான காரணத்தை தேடியபோது கடற்றொழில் சமூகத்தில் மட்டுமல்லாது இளைஞர் மட்டத்திலும் இது தொடர்பில் போதிய விழிப்புணர்வுகள் சென்றடையவில்லை என தெரிய வருகின்றது.
இதே நேரம் இங்கு சாதாரண கற்கை நெறிகள் தொடக்கம் படகு இயந்திரங்கள் திருத்தல், ஆழ்கடல் நீச்சல், கடலுணவு தயாரிப்புகள் GPS கண்காணிப்பு மற்றும் அளவீட்டு முறை என பலவகையான தொழில்துறை கற்கைகள் பயில்விக்கப்படுகின்றன.
இந்த கற்பிதங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் இம்முறை உலக கடற்றொளிலாளர் நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் நடமாடும் பயிற்சி கருத்தரங்குகளை முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த வய்ப்பை அனைவரும் சரியாக பயன்படுத்திக் கொள்வதனூடாக தொழில் சந்தையில் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.



.jpg)


No comments