கிண்ணியா- கண்டி வீதியில், வில்வெளிப் பிரதேசத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான கிண்ணியா சூரங்கல் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது இப்புனுள்ளா (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மீன் வியாபாரியான இவர், இன்றைய தினம் கனமழைக்கு மத்தியிலும் தனது மோட்டார் சைக்கிளில் மீன் சந்தையை நோக்கிப் பயணித்துள்ளார்.
அதன் போது, எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



.jpg)


No comments