நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர் தர பரீட்சை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியனகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினம் வியாழக்கிழமை மற்றும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் பரீட்சை நடைபெறாது என தெரிவித்தார்.
புதிய பரீட்சைத் திகதிகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என மேலும் தெரிவித்தார்.






No comments