யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து யாசகம் பெற்று , பொது இடங்களில் தங்கி வாழ்ந்து வந்தார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.






No comments