யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினுடய ஏற்பாட்டில் (JSAC) கார்த்திகை 25 ஆம் திகதி தொடக்கம் மார்கழி 10 ஆம் திகதி வரை பால் நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்றிட்டமானது "அனைத்துப் பெண்கள் மற்றும் சிறுமிகளை இணையவழி வன்முறைகளிலிருந்து இன்றே பாதுகாப்போம் - Stop Digital Violence" எனும் தொனிப்பொருளின் கீழ் துண்டுப்பிரசுரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் யாழ் சமூக செயற்பாட்டு மையம் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ந. சுகிர்தராஜ் வழங்கி வைத்தார்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக்கு குரல் கொடுக்கும் முகமாக இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இச் செயற்றிட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி, பெண்கள் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் கி. தயாபரி மற்றும் யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.



%20(1).jpg)


No comments