பதுளையில் தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 04ஆம் திகதி சிறுமி தனது தாய் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில் , படுகாயங்களுடன்
பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில், பதுளை, எகொடவெலவைச் சேர்ந்த 28 வயது துலாஞ்சலி குமாரி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து தாய்க்கு தீ வைத்தார் எனும் குற்றச்சாட்டில் 13 வயதான சிறுமியை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , சிறுமியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.






No comments