Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியா பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு - பகிடிவதை காரணமா ?


வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவன் ஒருவரின் திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த  23 வயதான மாணவனே மேற்படி உயிரழந்துள்ளார்.

கடந்த 31 ஆம் திகதி இரவு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவன் பல்கலைக்கழக விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு  விரைந்து  கொண்டு  சென்று அனுமதிக்கப்பட்டார். ஆனால் மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டத்தாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த மாணவனின்  உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவமனையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் குறித்த  மரணத்திற்கான  காரணம், பிரேத பரிசோதனைக்கு பின்னர் விசாரணையில் வெளிப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை , தனது சகோதரன் மூத்த மாணவர்களால் தான் தொடர்ச்சியாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக கூறி வந்தார். எனவே பகிடிவதைக்கு உள்ளாக்கி , சகோதரனை படுகொலை செய்து விட்டார்கள் எனவே இது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சகோதரி கோரியுள்ளார்.

No comments