கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நிலவும் கடுமையான மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக சேவைகளை மட்டுப்படுத்தி வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மருத்துவ கிளினிக் மற்றும் பிற கிளினிக்குகளுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
காலநிலை சீரான பின் வழக்கமான சிகிச்சைகளைப் பெற முடியும் என்பதை அறியத் தருகிறோம். குறிப்பாக நாளைய தினம் சனிக்கிழமை யாழ் மாவட்டம் கடுமையாக பாதிக்கபடலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
கிளினிக் மருந்துகள் கைவசம் இல்லாதவர்கள் கட்டாயம் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது, இயலாமை இருப்பின், கிளினிக் கொப்பிகளை அனுப்பி மருந்துகளைப் பெறவும் முடியும்.
மேலதிக தகவல்கள் தேவையெனில், வைத்தியசாலை அனர்த்த முகாம் பிரிவை தொடர்பு கொள்ளலாம். மேலதிக தகவல்களை அறிய விரும்பின் 070 1222261 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவித்துள்ளார்.




.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


No comments