வலி வடக்கு பிரதேசசபையின் 2026 ம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்குள்ளும் பாதீட்டுக்கான சபை அமர்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
அதன் போது, தவிசாளரினால், வலி வடக்கு பிரதேசசபையின் 2026ம் ஆண்டுக்கான கன்னி பாதீடு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வேளை பாதீடு மீதான வாக்கெடுப்பு தொடர்பான கோரிக்கையின் போது 35 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 09 உறுப்பினர்கள் வாங்கெடுப்பை நடாத்தக் கோரிய நிலையில் 22 உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லை என்பதற்கமைய வலி வடக்கு பிரதேசசபையின் கன்னி பாதீடு நிறைவேறியது






No comments