கிளிநொச்சி , இயக்கச்சி பகுதியில் டிப்பர் வாகனமும் , காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும் , கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பரும் இன்றைய தினம் சனிக்கிழமை இயக்கச்சி பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
அதில் டிப்பர் சாரதியான தமிழ்ச்செல்வன் கதிர் (வயது 38) , காரில் பயணித்த வேலாயுதம் சர்வேந்தன் (வயது 63) மற்றும் ஜெகன் மதுசன் (வயது 20) ஆகிய மூவருமே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









No comments