Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி போட்டிகள் நடைபெறும் - பிமல் நம்பிக்கை


யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விளையாட்டு போட்டிகள் நடைபெறவும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாட்டப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியம். விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் இனங்காணப்பட்ட விடயம்.

யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பெரியளவில் இல்லை. மழை காலத்தில் அது பெரிய சிரமத்தை ஏற்படுத்துவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வீரர் வியாஸ்காந் இலங்கை தேசிய அணியில் விளையாடுகிறார். 

எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 31, மழை காலம் ஆரம்பிக்க முன் உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இங்கு நடைபெறும் முதல் போட்டிக்கு நான் வருவேன் என மேலும் தெரிவித்தார்

No comments