அனுராதபுரத்தில் சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கருதி, பேயை விரட்டுவதாக கூறி, சிறுமிக்கு தீ வைத்த பெண் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரவ்பொத்தானை, கபுகொல்லாவை பகுதியை சேர்ந்த 45 வயதான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது 16 வயதான சிறுமிக்கு பேய் பிடித்துள்ளதாக மந்திரவாதியான பெண்ணிடம் மகளை அழைத்து சென்று பேயை விரட்ட பெற்றோர் கேட்டுள்ளனர்
அதனை அடுத்து, சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதாக கூறி, கரும்புகையை மூட்டி, சிறுமிக்கு அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் சிறுமியின் உடலில் தீ வைத்துள்ளார்
குறித்த பெண்ணின் செயலினால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியை மீட்டு , வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதனை அடுத்து மந்திரவாதியான பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







No comments