வெலிமடை, பிரதேசத்தில் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தம்பதியினரில் மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், கணவர் காணாமல் போயுள்ளார்.
வெலிமடை பிரதேச செயலகப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று திங்கட்கிழமை மாலை இருவரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்பகுதி மக்கள் நேற்றிரவு முழுவதும் தம்பதியினரைத் தேடி வந்த நிலையில், பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் எனவும் காணாமல் போனவர் 37 வயதுடைய ஆண் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல் போனவரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.






No comments