மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மனைவி மற்றும் கணவனுக்கு இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, கணவன் மின்விசிறி வயரினால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலையைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் கணவன் விஷம் அருந்தி உயிர்மாய்க்க முயற்சித்துள்ள நிலையில், அவர் தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
25 வயதுடைய சந்தேகநபர் வைத்தியசாலையில் இருக்கும்போதே கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்
வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






No comments