களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, தேவையானால் படகு சேவைகளும் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் இருந்து வெளியேற முடியாமலும் நீர் அதிகமாக காணப்படும் இடங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக படகு சேவை புரிபவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் குறித்த மாவட்டங்களுக்கு பொறுப்பானவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் படகு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



.jpg)


No comments