தீவிரவாதிகள் என அரசங்கத்தால் முத்திரை குத்தப்பட்ட தரப்பை நினைவுக் கூறுவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளித்தமை, அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
பொது ஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கொட்டகைகளில் மாவீரர் தின நினைவேந்தல் இடம்பெறுகின்றன.
இதை ஒரு நிகழ்வாக ஒருசில குழுக்கள் இணைந்து மேற்கொள்கின்றனர். பல ஆயிரம் பேர் உயிரிழப்பதற்கு காணமான தீவிரவாதிகள் என அரசங்கத்தால் முத்திரை குத்தப்பட்ட தரப்பை நினைவுக் கூறுவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளித்தமை அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இந்நாட்டில் தனி இராச்சியத்தைக் கோரி போராடியவர்கள். யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளை வீடுகளில் நினைவுக் கூறலாம்.
மாவீரர் தினம் அனுஷ்டிப்பது இந்நாட்டில் பிரிவினை வாதத்துக்கு மீள உயிர் கொடுக்கு செயலாகும்.
இவை இந்நாட்டு தமிழ் மக்களுக்கு அவசியம் இல்லை, எனினும் பிரிவினை வாதிகள் நாட்டை பிளவுபடுத்தும் நோக்குடன் இத்தகைய செயல்களை மேற்கொள்கின்றனர்.
வெளிநாட்டில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் நிதி உதவியில் இந்நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அரசாங்கம் இந்நிகழ்வுகள் குறித்து பெறுப்புக் கூறுவது அவசியம் என மேலும் தெரிவித்தார்.






No comments