மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற, ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்காக மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றது.
அதன் போது, மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களின் நிர்மாணப் பணிகள், நீர் வழங்கல் மற்றும் மின்சார விநியோகத்தை சீர்செய்தல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல், மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான அடித்தளத்தை தயாரித்தல், சுகாதாரம் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பது குறித்து விசேட மாக கலந்துரையாடப்பட்டது.
அனர்த்த நிலைமையால் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கும், மன்னாரில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான நிரந்தரத் திட்டத்தை செயல்படுத்தவும் அறிவுறுத்தியதுடன், மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற, ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.






No comments