முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு வடக்கு பகுதியில் கணவன், மனைவி உட்பட ஐந்து பேர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூங்கிலாறு வடக்கில் வீடொன்றில் ஐஸ் போதைப் பொருளை விற்பனைக்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து 2 வாள்கள், 61,000 ரூபா பணம் மற்றும் சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.







No comments