Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 7.9 வீதமான குடும்பங்கள் பாதிப்பு


யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குடும்பங்களில் 7.9 வீதமான குடும்பங்கள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் , பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை சுத்தம் செய்தவற்காக தலா 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு யாழ்ப்பாணத்திற்கும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.  

அனர்த்த நிலமைகளுக்குப் பின்னராக யாழ்ப்பாண மாவட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக  அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், சரியான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் பேணி, உரிய நேரத்தில் அறிக்கையிடல் வேண்டும். இதன் மூலம் வினைத்திறனாக செயற்பட முடியும்.  அதற்காக அனைவரும், கூட்டுப் பொறுப்புடனும் வினைத்திறனாகவும் செயற்பட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

எமது மாவட்டத்தின் மொத்த குடும்ப எண்ணிக்கையில்  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களாக     7.9% வீதமானவர்கள் காணப்படுகின்றனர்.

அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுத்தம் செய்வதற்கும் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை நிர்வகிப்பதற்கும்  தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் உடனடியாக  வழங்குவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதற்கு அமைவாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு  நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டுள்ளது, 

அந்த நிதி பிரதேச செயலகங்களுக்கு உடனடியாக நிதி விடுவிக்கப்படும். சுற்றுநிருபத்திற்கு அமைய கொடுப்பனவுகளை விரைவுபடுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடுகளை கேட்டறிந்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் தாமாகவிரும்பி மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்படும் பொருட்களை தேவைக்கு ஏற்ப பங்கீடு செய்யப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார். 

இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர்களான கே. சிவகரன், மற்றும் பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.தர்சினி, நிர்வாக உத்தியோகத்தர் ஆ. சத்தியமூர்த்தி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட இணைப்பாளர்  ஆ. நளாயினி மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

No comments