காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலையத்தினாரால் பசுமைத் திட்டத்தின் கீழாக 1000 மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
பசுமைத் திட்டத்தின் முதற்கட்டம் கடந்த நவம்பர் 21ம் திகிதி ஆரம்பிக்கப்பட்டு ஐந்நூறு மரக்கன்றுகள் கிராம மக்களின் பங்களிப்புடன் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் உதயசூரியன் சனசமூக நிலையத்தின் தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆரம்பமானது.
இயற்கையின் ஆர்வலரான சசிகரன் அவர்களினால் ரோக்கியோ சிமெண்ட் நிறுவனம் திருகோணமலையில் இருந்து 1000 மரக்கன்றுகள் பெற்றுத் தரப்பட்டது.
உதயசூரியன் சனசமூக நிலையத்தின் முன் ஆரம்பமான பசுமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நிகழ்வில் ரோக்கியோ சிமெண் நிறுவனத்தின் உயர் அதிகாரி எஸ்.சிவகரன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை உத்தியோக பூர்வமாக நிருவாகத்தினரிடம் கையளித்து மரக்கன்றுகளையும் நாட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இத் நிகழ்வில் கிராம மக்களும் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.



.jpg)







No comments