யாழ்ப்பாணத்தில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
வட்டுக்கோட்டை முதலி கோவலடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , இளைஞனை கைது செய்ததுடன் , இளைஞனின் உடைமையில் இருந்து வாளினையும் மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்திய போது , இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது






No comments