வட்டுவாகல் பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால், இப்பாதை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
எனவே விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணம் செய்பவர்கள் மாற்று வழியாக கேப்பாப்பிலவு சாலையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
கேப்பாப்பிலவு சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாது. ஆனால் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இலகு வாகனங்கள் பயணம் செய்யலாம்.
ஆகையால், தயவுசெய்து கேப்பாப்பிலவு சாலையைப் பயன்படுத்தவும் என முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.






No comments