திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான ஆறு பேரையும் பிணையில் செல்ல மூதூர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
அந்நிலையில் ஆறு பேரில் இருவர் பிணையில் வெளிவந்த நிலையில் , ஏனைய நால்வரும் பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத்தமையால் , அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் , நாளைய தினம் செவ்வாய்க்கிழமை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றியதும் , விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேச செயலகத்தில் கடந்த 13ஆம் திகதி நிவாரணம் வழங்கப்பட்ட வேளை , நிவாரணம் வழங்குவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக குற்றம் சாட்டி, பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது , பிரதேச செயலகத்தினுள் அத்துமீறி நுழைந்தமை , அரச கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ஆறு பேர் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் , விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சார்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, சட்டத்தரணியால் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டமையை அடுத்து, ஆறு பேருக்கும் மன்று பிணை வழங்கியது.






No comments