நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, கடந்த 26ஆம் திகதி முதல் நேற்றைய தினம் முதலாம் திகதி மாலை 06 மணி வரையிலான ஆறு நாட்களில் 77 பேர் உயிரிழந்ததாகவும் 73 பேர் காணாமல் போயுள்ளதாகவும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும் 5ஆயிரத்து 729 குடும்பங்களைச் சேர்ந்த 20ஆயிரத்து 649 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 2124 குடும்பங்களைச் சேர்ந்த 8718 பேர் 79 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார் ,
மேலும் நுவரெலியாவிலிருந்து - ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதி தற்போது போக்குவரத்துக்காக திறக்கப்பட்டதாகவும் குறித்த வீதியில் இன்னும் பல இடங்களில் மண்சரிவுகள் ,வீதி தாழிறங்குதல் ஏற்படுவதற்கு பல அபாயகரமான வெடிப்புக்கள் உள்ளதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செல்லுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.






No comments